கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இலங்கை சிறுமிக்கு ரமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் உதவி செய்துள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது 12வயது மகள் ரத்த புற்று நோயால் அவதிபட்டு வந்துள்ளார்.
இதனால், அந்த சிறுமிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, அவருக்கு மாதம் ஒருமுறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆனால்,கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வாகன போக்குவரத்து எதுவும் இன்றி சிகிச்சைக்கு போக முடியாமல் அவதிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ராமநாதரபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமாரை தொடர்பு கொண்ட ராணி, மகளின் நிலை குறித்து எடுத்து கூறியுள்ளார்.
உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராணியின் சொந்த ஊர் தனி பிரிவு பொலிசாருக்கு தகவல் கொடுத்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த சிறுமியின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளனர்பின்ன கடந்த திங்கட்கிழமை 4 மணியளவில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து காவல்துறையின் வாகனத்தில், சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மாலையில் திருப்பி அழைத்து வந்து முகாமில் விட்டுள்ளனர்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய ராணி, “எனது மகளுக்கு மாதம் ஒரு முறை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையத்தில் ரத்த மாதிரிகள் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் வந்தபின் மருந்துகள் மாற்றி கொடுக்கப்படும். சிகிச்சைக்கு செல்லாவிட்டால் நோயின் தாக்கம் அதிகரித்துவிடும். எனவேதான் இந்த உதவியை கோரினேன்.
உடனடியாக கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை எடுத்தது மட்டுமில்லாமல் பேருந்து வசதியில்லாததால் மருத்துவமனை செல்ல காவல்துறை வாகனத்தை அனுப்பி மிக பெரிய உதவி செய்தார்" என்று தெரிவித்தார்வருண்குமார் செய்த இந்த உதவி இலங்கை அகதிகளை மட்டுமில்லாமல் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

