7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

முல்லைத்தீவில் தனிமைப்டுத்தப்பட்டிருந்த இருவர் தப்பியோட்டம்

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கேப்பாப்புலவு
தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் இருவர் தப்பி ஓடியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதியினர் கேப்பாப்புலவு தனிமைப்படுத்தும் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரே தப்பி ஓடியிருப்பதாகவும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்