ஜப்பான் நடத்திய குண்டு தாக்குதலில் கடலில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் ஒன்றை கடற்படையினர் மீண்டும் கரைக்கு கொண்டு
வந்துள்ளனர்.
வந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், இந்த கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
1942ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி ஜப்பான் விமானப்படை மேற்கொண்ட குண்டு தாக்குதலில் இந்த கப்பல் கடலில் மூழ்கியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
138 மீற்றர் நீளமான இந்த கப்பல் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளை தலைமையகம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து 5 மாதங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் கப்பலை மீண்டும் கடலுக்குள் இருந்து வெளியில் எடுத்ததாக கடற்படையினர் கூறியுள்ளனர்.
திருகோணமலை துறைமுகத்தின் வசதிகளை விரிவாக்கும் தேவை ஏற்பட்டதன் காரணமாக 35 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த கப்பலை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
பிரித்தானிய அரச கடற்படைக்கு சொந்தமான சகயின் என்ற இந்த கப்பல் 75 வருடங்களுக்கு பின்னர் கடலுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

