7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 31 மார்ச், 2018

ஊரணி பகுதியில் தீ விபத்து. 3 வாகனங்கள் தீக்கிரை!

நேற்று இரவு தீ விபத்து சம்பவம் ஒன்று ஊரணி பகுதியில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை பிரதான வீதி ஊரணி பகுதியிலுள்ள வாகன திருத்துமிடம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், இதில் 3 வாகனங்கள் எரிந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகன திருத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் எரியூட்டப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவென பாதிக்கப்பட்டுள்ள வாகன திருத்துமிட உரிமையாளர் தெரிவித்துள்ளார்
மேலும், குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்