7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 18 மார்ச், 2018

3 ஆயிரம் கையொப்பங்களுடன் ஜெனீவா புறப்பட்டார் பரந்தாமன்

ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜருடன் இந்தியாவின் ஓய்வுபெற்ற நீதியரசரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அரிபரந்தாமன் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டனர்.
3 ஆயிரம் பேருடைய கையொப்பங்களுடனான இந்த மகஜர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரிபரந்தாமனுடன் 3 சட்டத்தரணிகளும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் இவர்கள் சந்திப்பார்கள்.
திங்கட்கிழமை முதல் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்வுகளில் இவர்கள் பங்குபற்றுவதுடன், பக்க நிகழ்வுகளிலும் இவர்கள் பங்குகொள்வார்கள். பிரதான மண்டபத்தில் இடம்பெறும் இலங்கை குறித்த விவாதத்திலும் அரிபரந்தாமன் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் கருத்துவெளியிட்ட அரிபரந்தாமன், ”இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம் என்பதை நான் ஜெனீவாவில் வலியுறுத்துவேன். குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரணைகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்