இலங்கையில் அமலில் இருந்த அவசர நிலை பிரகடன் திரும்பப் பெறப்படுவதாக, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கை, கண்டி மாவட்டத்தில், இஸ்லாமிய மதத்தினருக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல இஸ்லாமிய கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டதால், கலவரம் பெரிதாக மாறியது. இதேப்போன்று, இஸ்லாமியர் மற்றும் புத்தமத வழிப்பாட்டு தலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் காரணமாக, தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கண்டியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள மற்ற இடங்களிலும் பலர் தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மார்ச் 6-ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் சிறிசேனா அமல்படுத்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கண்டியில் நடந்த மத வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 2 தலைவர்கள் உட்பட, 10 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, இலங்கையில் அமைதி நிலவுவதாலும், பொது மக்களுக்குப் பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாலும், அவசர நிலை பிரகடனத்தை திருப்பிப் பெறுவதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இலங்கையில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.