யாழ். வடமராட்சி இடைக்காடு அக்கரை உல்லாசக் கடற்கரையில் இடம்பெறும் செயற்பாடுகளைக் கண்காணித்துச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவாக குறித்த பகுதியில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளர்.
வலி. கிழக்குப் பிரதேச சபையின் செயலாளர் யுகராசா ஜெலீபன் இதனை தெரிவித்துள்ளார்.
அக்கரை உல்லாசக் கடற்கரையையும், இப்பகுதியில் உல்லாசப் பயணிகள் கூடுவதையும் இல்லாமல் செய்ய வேண்டுமென்னும் நோக்குடன் ஒரு குழுவினர் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் உல்லாசப் பூங்காவின் மலசலகூடங்களும், சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக உல்லாசக் கடற்கரைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால் பிரதேச சபைக்குப் பெருமளவு வருமான இழப்பும் ஏற்படுகின்றது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

