வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலையில் 42 மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று சாதனைப்படைத்துள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்தடவையாக அதிகூடியவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.
இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் கரணியா சுபாகரன் தெரிவிக்கையில், பரீட்சைக்கு தோற்றியவர்களில் 99.3 வீதமானோர் உயர்தரம் படிக்க தகுதிபெற்றுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் கரணியா சுபாகரன் தெரிவிக்கையில், பரீட்சைக்கு தோற்றியவர்களில் 99.3 வீதமானோர் உயர்தரம் படிக்க தகுதிபெற்றுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.