தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் என்ற வழக்கறிஞரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இவர் அண்மையில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் பிரதான நுழைவு வாயிலின் கதவில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படம் ஒன்றினைச் செதுக்கியிருக்கிறார்.
அவ் உருவப்படத்திற்கு கீழ், தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இவரின் வீட்டிற்கான புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்கள், பிரபாகரனின் உருவப்படத்தினைப் பார்த்து, ஆச்சரியமடைந்துள்ளதுடன் மகிழ்ச்சியுடன் புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர் என்று சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.


