7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 31 மார்ச், 2018

ஈபிடிபியை புனிதர்கள் ஆக்கிவிட்ட கூட்டமைப்பு ! ஈபிடிபி மகிழ்ச்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது.காலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது.காலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது.  ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் எம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடம் ஆதரவு கோரி – ஆதரவு பெற்று எங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது என ஒட்டுக்குழு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களான ஜெகன் மற்றும் முடியப்பு றெமிடியஸ் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்

யாழ் ஊடக அமையத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அத்துடன் அங்கு கருத்து தெரிவித்த ஒட்டுக்குழு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ் தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள். .

நாங்கள் 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம். என்றும் தெரிவித்தார் .

இதேவேளை கூட்டமைப்பின் இணக்க அரசியல் முடிவுக்கு தமிழர் தரப்பில் பலத்த எதிர்ப்பலை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்