7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 30 மார்ச், 2018

சிரியாவிலிருந்து விரைவில் ராணுவம் வாபஸ்: டிரம்ப்

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான போரில் அமெரிக்க வெற்றியை நெருங்கிவிட்டது. அந்த அமைப்பிடமுள்ள பகுதிகள் 100 சதவீதம் மீட்கப்படும். இதன் பின்னர் சிரியாவில் இருந்து நமது ராணுவம் மிக விரைவில் வாபஸ் பெறப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளில் 7 டிரில்லியன் டாலர் நிதி வீணாக செலவிடப்பட்டுள்ளது. அங்கு நாம் பள்ளிகளை கட்டினால், பயங்கரவாதிகள் இடிப்பார்கள். மீண்டும் கட்டினால் மீண்டும் இடிப்பார்கள். இதே நிலைமை தொடர்ந்து வருகிறது. ஆனால், ஓகியோவின் பள்ளி வாயில்களை சரி செய்யவும் பென்சில்வேனியா அல்லது லோயா பகுதிகளில் பள்ளிகள் கட்ட பணம் கிடைக்காது. மத்திய கிழக்கு நாடுகளில் 7 டிரில்லியன் டாலர் பணத்தை வீணடித்துள்ளோம். நாம் அங்கு எண்ணெய் பெற்றால் பரவாயில்லை. அதுவும் இல்லை. பெரும்பாலான எண்ணை வளத்தை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பெறுகின்றனர். அவர்களுக்காக நாம் ஏன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அது முட்டாள் தனமானது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்