7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 29 மார்ச், 2018

திருமணமாகி இரண்டு மாதங்களில் வீதி விபத்தில் இளைஞன் பலி

கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
குறித்த பகுதியை சேர்ந்த திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் நேற்று முன்தினம் கேப்பாபுலவில் இருந்து அதிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டுள்ளது.
 
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
 
இவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
 
சூரிபுரம் கேப்பாபுலவை சேர்ந்த 20 வயதுடைய சண்முகலிங்கம் நிமலன் என்ற திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன இளைஞனே பலியாகியுள்ளார்.
 
விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்