அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலவிவருகின்ற வரட்சி காரணமாக
3179 குடும்பங்களை சேர்ந்த 10,000 க்கு மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3179 குடும்பங்களை சேர்ந்த 10,000 க்கு மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் மற்றும் நீர் நிலைகள் மிக வேகமாக வற்றி வருவதனால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தண்ணீரினை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
அத்துடன் மேட்டு நிலங்களாக காணப்படும் மல்லிகைத்தீவு, வேணாவில், புதுக்குடியிருப்பு மேற்கு மந்துவில், இரணைப்பாலை, தேவிபுரம், மன்னாகண்டல், கைவேலி, சுதந்திரபுரம், உடையார் கட்டு, விசுவமடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 3179 குடும்பங்களை சேர்ந்த 10,000 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

