7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

சாவகச்சேரியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்தபெண்ணுக்கு நடந்த கதி

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது காற்றில் அள்ளுண்டு சென்ற தலைக்கவசத்தை எடுப்பதற்காக குதித்த இளம் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(05)பிற்பகல் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது காற்றில் அள்ளுண்டு சென்ற தலைக்கவசத்தை எடுப்பதற்காக குதித்த இளம் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(05)பிற்பகல் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுதுமலைப் ப்குதியிலிருந்து தென்மராட்சியை நோக்கி குறித்த பெண்மணி தனது கணவருடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது அவர் அணிந்திருந்த தலைக்கவசம் பாதுகாப்பாகப் பூட்டப்படாத காரணத்தால் அவரது தலைக்கவசம் காற்றில் அள்ளுண்டு பறந்துள்ளது.
இதனைச் சற்றும் எதிர்பாராத மேற்படி பெண்மணி மோட்டார்ச் சைக்கிள் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே மோட்டார்ச் சைக்கிளிலிருந்து குதித்துள்ளார். இதனால் தலையில் படுகாயங்களுக்குள்ளான குறித்த பெண்மணி யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்