7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களில் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்லிணக்க ஒருங்கிணைப்பு பொறிமுறைக்கான செயலகம் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தாய் தந்தை மற்றும் குடும்பத் தலைவர்கள் என 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 40 வீதமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட 38 வீதமானோரும் 17 வயதுக்கு உட்பட்ட 9.8 வீதமானோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.,ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் நிலைமை என்ன என்று தெரியாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என அந்த செயலகம் தெரிவித்துள்ளது.,

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்