7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

இலங்கையில் நிலவும் வறட்சி 10 இலட்சம் பேர் பாதிப்பு !!

இலங்கையில் நிலவும் வறட்சி நிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காரணமாக புத்தளம்
மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி அந்த மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதவிர, குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 259 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 983 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கை கூறுகின்றது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 5 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 9631 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 990 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்