மதவச்சி - கரம்பன்குளம் பிரதேசத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த தம்பதிகள் வேனில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மதவாச்சி – கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான மனைவி மற்றும் 25 வயதான கணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி காயமடைந்து மதவச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

