வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியோன்றில் இன்று இளைஞன் ஒருவனின் சடலத்தினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியோன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞனின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

