இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்து என பிரித்தானியா ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மிரிஸ்ஸ பகுதியில் கடந்த வாரம் சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட இரண்டு பிரித்தானியா பெண்கள் மீது பாலியல் பலாத்கார முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தடுத்து நிறுத்தப்பட்ட போதும், தடுத்து நிறுத்த முற்பட்ட ட்சசு நாட்டு நபருக்கு இளைஞர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானியா ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் மிரிஸ்ஸ பகுதி ஒன்றில் உள்ள விடுதி ஒன்றில், இரவு உணவு எடுக்க சென்ற குறித்த வெளிநாட்டு பெண்களிடம் இளைஞர்கள் சிலர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் தவறாக நடக்க பலர் முயற்சிப்பதாகவும், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சுற்லுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரித்தானியா ஊடகம் தெரிவித்துள்ளது.

