7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 5 ஏப்ரல், 2018

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரின் சடலம்

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கற்கும் 16 வயதான  சிவலிங்கம் திஷாந்தினி  என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடல்,  உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில், சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்துள்ள சம்பவம் ஆயித்தியமலை பொலிசாருக்கு தெரிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கௌரவ நீதிபதியின் அனுமதியுடன் இன்று பிற்பகல் 01.30 க்கு சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று, சடலத்தை பார்வையிட்டு, விசாரனைகளை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
கடுமையான முன்கோபமுள்ள இவர் நேற்று தனது 12 வயதுடைய தம்பியுடன் சண்டையிட்டதாகவும், அதனையறிந்த தாய், தம்பிக்கு அடித்ததால் இவர் கோபமுற்றதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மகிழவெட்டுவான் மகா வித்தியாலயத்தில் 09 ஆம் ஆண்டில் கல்விபயிலும் மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்