7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

புதன், 11 ஏப்ரல், 2018

மாமியாரை தாக்கிய நபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மாமியாரை தாக்கி காயப்படுத்திய மருமகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த நபரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாலையூற்று, மகமாயபுர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சாராயம் குடித்து விட்டு வீட்டிற்குச் சென்று மனைவியின் அம்மாவிடம் பணம் கேட்டு சண்டையிட்டு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்