7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

புதன், 11 ஏப்ரல், 2018

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!


கிளிநொச்சி அறிவியல் நகரின்  யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக  சந்தேகத்தின்  அடிப்படையில் அகழ்வுப் பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று மாலை நான்கு மணி தொடக்கம் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ் அகழ்வு பணிகள் விசேட அதிரடிப்படையினர், பொலீஸார் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர்  பிரதேச கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பிரசன்னத்தின் மத்தியில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்