யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா குழுவினர் தலையெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பளை கலைவாணி நூலகம் அருகில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞரொருவரை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தெல்லிப்பளை ரவிச்சந்திரன் லக்ஷான் எனும் 19 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே பொலிஸார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆவா குழுவினரின் செயற்பாடுகள் காரணமாக விசேட பொலிஸ் படை களத்தில் இறங்கி அவர்களை அடக்கியது.
இதன்போது, ஆவா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இளைஞரின் தாக்குதல் சம்பவம் மீண்டும் ஆவா குழுவினர் தலையெடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.