காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், பேத்தியாருடன் வசித்த பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பத் தலைவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், பேத்தியாருடன் வசித்த பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பத் தலைவர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் தாயார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். அவரது தந்தை நோயுற்றுள்ளார். சிறுமி பேத்தியாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்போது அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியின் வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.