தேசிய தடகளப் போட்டிகளில் கனிஷ்ட பிரிவில் , 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5,000 மற்றும் 10,000 மீற்றர் ஓட்டங்களில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கிந்துஜன் தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
மேலும் கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கிந்துஜன் 15 நிமிடங்கள் 56 செக்கன்கள் 10 மில்லி செக்கன்களில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றார்.இவர் 10,000 மீற்றர் ஓட்டத்தில் 33 நிமிடங்கள் 56 செக்கன்கள் 81 மில்லி செக்கன்களில் ஓடி தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

