யாழ் நகரசபை பகுதியில் இரவு வேளைகளில் பெண்களை சட்டவிரோத செயற்பாடுகளிற்கு ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தொடர்பாக நேற்று யாழ் மாநகரசபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ் பேரூந்து நிலையம் மற்றும் நகரின் வேறு சில பகுதிகளில் இரவு 8 மணி தொடக்கம் 10 மணிவரையும் ஆங்காங்கே சில பெண்கள் காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதிற்கும் குறைந்தவர்கள். பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவே அனேகமாக இது இடம்பெறுகிறது. முச்சக்கரவண்டிகளில்தான் அவர்கள் ஏற்றிச்செல்லப்படுகிறார்கள்.
ஒரே பெண்கள்தான் தினமும் அங்கு வருகிறார்கள். ஆனால் தினமும் வெவ்வேறு ஆட்களுடன் செல்கிறார்கள். பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் காவல்துறையின் கண்காணிப்பு பகுதி இருக்கிறது. ஆனாலும் அவர்கள் இதை கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு யாழ் மாநகரசபையின் பெண் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர். இதை மற்ற உறுப்பினர்களும் ஆமோதிக்க, யாழ் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதென முடிவாகியுள்ளது.