7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

சனி, 23 ஜூன், 2018

தந்தையின் கத்திக்குத்திலிருந்து மகளை காப்பாற்றி உயிர் நீத்த முன்னாள் போராளி!

தென் தமிழீழம், தந்தை ஒருவர் தன் மகளைக் கத்தியால் குத்த முற்பட்டபோது அதனைத் தடுக்க முனைந்த முன்னாள் போராளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பொத்துவில், கோமாரி ரொட்டையைச் சேர்ந்த 55 வயதுடைய சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்றழைக்கப்படும் முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பப் பிரச்சனை காரணமாக தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியைக் கத்தியால் குத்த முற்பட்டபோது அதனைத் தடுக்க முன்னாள் போராளி முயற்சித்துள்ளார்.
இதன்போதே அவர் தவறுதலாகத் தாக்குதலுக்கு இலக்காகியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொத்துவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கத்திகுத்துத் தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்