7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 2 ஜூலை, 2018

யாழ் காரைநகரில் 14 வயது மாணவனைக் காணவில்லை

காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு (வயது-14) என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.07.01) மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்