சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலைச் சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரிப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், சங்கானைப் பகுதியிலுள்ள முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வில் சிறுமி ஒருவர் விநோத உடைப்போட்டியில் ஈடுப்பட்டார்.
அவர் றெஜினாவின் ஆவி போன்று வேடமிட்டு, எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன் இந்த வேடம் றெஜினாவை நினைவுப்படுத்தியமையினால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சங்கானை சலேசியார் முன்பள்ளியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில், தனது இறப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று றெஜினாவின் ஆவி போன்று வேடமிட்டுள்ளார்.
‘நான் இறந்த றெஜினா. என் சாவுக்கு நீதி வேண்டும். சிறுவர் மீதான துர்நடத்தைகள், படு கொலைகள் தடுக்கப்படவேண்டும். என் போல் இனி ஒருவரும் இறக்கக் கூடாது. என்னை கொன்றவர்களுக்குத் தகுந்த தண்டனை வேண்டும்’ என்று அவர் தாங்கியிருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

