வட மாகாணத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், இதுவரை 2 ஆயிரத்து 788 குடும்பங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 414 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், ஆயிரத்து 347 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுல் 5 ஆயிரத்து 775 பேர், 40 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.