7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 24 டிசம்பர், 2018

வடக்கு, கிழக்கு தொடரும் மழை மக்களுக்கு அறிவுறுத்தல்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றும் வீசக்கூடுமெனவும், மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புக்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கடற் பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படும் அதேவேளை, குறிப்பிட்ட இடங்களில் மழையின் போது கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்