சுமார் ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க அபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இலங்கையர்கள் ஒன்பது பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மருதானை, நீர்கொழும்பு, சீதுவை, சிலாபம் மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மற்றும் டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எடுத்து வந்த பயணப் பொதிகளில் இருந்து சுமார் 02 கிலோவும் 974 கிராம் நிறையுடைய தங்க அபரணங்கள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் 16,344,179 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.