போதைப்பொருள் பாவனைக்கெதிராக யாழ்.நாவற்குழிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை(21) முற்பகல் கவனயீா்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம்-மன்னாா் வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்திலிருந்து நாவற்குழிச் சந்திவரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் குடும்பப் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சம்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருளுக்கெதிரான பல்வேறு சுலோகங்களை கைகளில் தாங்கியும், போதைப் பொருளுக்கெதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேவேளை,இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் எமது சமூகம் போதையால் சீரழிவதை இனியும் பார்த்துக் கொண்டிருக்கத் தமக்குத் திராணியில்லை என ஆதங்கத்துடன் கருத்துத் தெரிவித்தனர்.