7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஹர்த்தாலால் முற்றாக முடங்கியது யாழ். வலிகாமம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில் வடக்கில் இன்றைய தினம்(25)முழு அடைப்புப் போராட்டம் இடம்பெறும் நிலையில் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ். வலிகாமம் பிரதேசத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக வலிகாமம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
ஹர்த்தால் காரணமாக வலிகாமம் பிரதேசத்தில் அரச, தனியார் பேருந்துச்சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றன.

வலிகாமத்தின் முக்கிய சந்தைகளான சுன்னாகம் பொதுச் சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைகள் இயங்கவில்லை.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காமையினால் பாடசாலைகளும் இயங்கவில்லை.அரசாங்க-தனியார் வங்கிகள், உப தபாலகங்கள்,எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள்,மருந்தகங்கள்,வர்த்தக நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டே காணப்படுகின்றன.

இதேவேளை, அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க வலிகாமத்தில் சுன்னாகம், மல்லாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்