7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பருத்துறையில் 8 பேரை குதறிய விசர்நாய்

கடந்த திங்கட்கிழமை 23.09.2019 அன்று காலை முதல் மதியம்வரை பருத்தித்துறை சிவன் கோவிலடியிலிருந்து மந்திகை சிலையடி, கண்ணகையம்மன் கோவில் வரை விலங்கு விசர் நோயுடையதெனச் சந்தேகிக்கப்படும் நாயொன்று கடித்ததில் 8 பேர் வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

 
குறித்த நாயானது மிகுந்த சிரமங்களின் மத்தியில் இனங்காணப்பட்டு சுகாதாரத்துறையினரின் மேற்பார்வையில் கொல்லப்பட்டது. இதன் பின்னர் மிருக வைத்தியரின் உதவியுடன் நாயின் தலையானது தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அது விலங்கு விசர் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் விசேடமாக நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது நடைபெற்று வருகின்றது. எனவே பொதுமக்கள் தங்களது நாய்கள் அனைத்திற்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதனை உறுதி செய்வதுடன் இப்பகுதியில் எவராவது நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெறாமல் இருப்பின் உடனடியாக வைத்திசாலை செல்லுமாறும் சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே வேளை விசர்நாய் கடித்து நாய் போல் குரைத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சிறுவன் ஒருவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்