7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 7 அக்டோபர், 2019

தமிழினத்தையும் , மொழியையும் உலகிற்கு அடையாளம் காட்டியது பிரபாகரன்!

தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டதாக தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வந்துள்ள அவர், மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
மேலும் கூறிய அவர், “பெரும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழைப் பற்றி சொன்னார்கள். அகநானூறு, புறநானூறு எல்லாம் கூறினார்கள். அப்போது கூட தமிழர்கள் உலக அளவில் கவனிக்கப்படவில்லை.
என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர்.
கறுப்பு நிறத்தைப் பார்த்தால் நீ யார் என்று கேட்பார்கள். தமிழன் என்று சொன்னால் பிரபாகரன் பூமியா என்று கேட்பார்கள்.  அந்த அளவுக்கு தமினத்தையும் மொழியையும் உலகிற்கு அடையாளம் காட்டியது பிரபாகரன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்