7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 7 அக்டோபர், 2019

ஏழ்மையிலும் சாதித்த முல்லைத்தீவு மாணவி

முல்லைத்தீவு துணுக்காய் வலய ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. ஜெயராசசிங்கம் அகலிசை 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் இரண்டு ஆசிரியர்களும் மொத்தமாக ஆறு மாணவர்களே கல்வி கற்று வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கிடைக்கப்பெற்ற வளங்களை வைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் குறித்த மாணவை சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இந்த நிலையில் பாடசாலை அதிபருக்கும், ஆசிரியர்களிற்கும் , பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இதேவேளை மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த குறித்த மாணவி அம்மம்மாவினுடைய அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்