பாதிக்கப்பட்ட மக்கள் நீதியினை கேட்கும் வரைக்கும் போர்குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் முல்லைத்தீவின் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரால் பதிக்கப்பட்ட மக்கள் நுண்நிதி கடனில் மூழ்கி வாழ முடியாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தளவு தூரத்திற்கு நாங்கள் பின்னிலையில் இருக்கின்றோம்.
கடந்த அரசு அபிவிருத்தி என்று கம்பரெலிய என்று பிரதேசங்களை சேவை செய்ய விட்டார்கள் அதனை இங்கு அபிவிருத்தி என்று படம் காட்டியுள்ளார்கள். ஏற்கனவே இருக்கின்ற வீதியில் குழிகளை மூடிவிடுவதுதான் அபிவிருத்தி என்று மக்களுக்கு வேலைத்திட்டங்களை காட்டினார்கள்.
அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு பெரும்பான்மையினை கொடுத்தது ஆட்சியினை தீர்மானிக்கும் பலத்தினை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொண்டு இன்று குழியினை நிரப்புவதை அபிவிருத்தி என்று மக்களை ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்.
அம்பாந்தோட்டை அன்று ஒரு பின்தங்கிய பிரதேசமாகத்தான் இருந்தது இன்று அம்பாந்தோட்டை கொழும்பிற்கு அடுத்த நகரமாக வளம்பெற்று வருகின்றது. இதுதான் அபிவிருத்தி அவர் தன்னுடைய மக்களுக்கு தன்னுடைய ஊருக்கு சேவையினையும் அபிவிருத்தியினையம் செய்கின்றார்.
வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று ஆட்களை தெரிவு செய்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக கடந்த அரசாங்கத்தின் முகவர்களாக இருந்தார்கள். ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லை பெரும்பான்மையினை கொடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கியது.
இந்த அரசுடன் தமிழ் மக்கள் பிரச்சனைக்காக வேறு வழிகளில் பேரம்பேசி செயற்பட பார்க்க வேண்டும் அரசின் பலவீனத்தினை தேடி அந்த அரசிற்கு அழுத்தத்தினை கொடுப்பதன் ஊடாகத்தான் தமிழர்கள் விரும்பியதை அரசினை கொண்டு செய்யமுடியும் ராஜபக்ஷ தரப்பு போரினை நடத்தியவர்கள் என்று இன்று உலகமே சொல்கின்றது. இலங்கை தீவில் தமிழர்களுக்கு எதிராக பாரிய குற்றங்கள் நடைபெற்றதாக சொல்கின்றது.
இனப்படுகொலையே நடந்தது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கின்றது. இந்த இடத்தில் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தான் இதனை செய்திருக்க வேண்டும்.
இவ்வாறான நிலையில் போர்குற்றவாளியினை குற்றாவளி கூண்டில் ஏற்றாமல் போர்க்குற்றவாளிகள் தப்பிக்க முயல்கின்ற நிலை அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் நீதியினை கேட்கும் வரைக்கும் குற்றாவாளிகள் தப்பிக்கமுடியாது.
தமிழர்கள் எந்தளவிற்கு இந்த விடையத்தில் அழுத்தம் கொடுக்கின்றோமோ அந்தளவிற்கு குற்றவாளிகளுக்கு நெருக்கடியினை ஏற்படுத்தி தமிழர்களுடன் புரிந்துணர்வு செய்வதற்கு வரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ஐந்து கட்சிகளின் கூட்டு என்று சொல்லி இன்று இறங்கியுள்ளார். வடமாகாண முதலமைச்சராக இருந்த போது ஏன் வடக்கு கிழக்கினை போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தவில்லை. இது தொடர்பில் ஏன் ஒரு வார்த்தைகூட கதைக்கவில்லை வடக்கில் பௌத்த விகாரை அமைத்தல் சிங்கள குடியேற்றம் மற்றும் தமிழ்மக்களின் பொருளாதாரத்தினை சூறையாடும் நோக்கில் புத்த விகாரையினை கட்டி கொடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான புத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு எங்கள் மக்கள் விளங்கிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இன்று வடக்கு கிழக்கில் இரண்டாவது பலமான கட்சியாக இருப்பது தமிழ்தேசிய மக்கள் முன்னணி மட்டும் தான். நாங்கள் வளர்ந்து கொண்டு வருகின்றோம், மற்ற கட்சிகள் விழுந்து கொண்டிருக்கின்றன. மக்களை சரியான வழிக்கு கொண்டு வருகின்றோம் என்ற நம்பிக்கை மக்கள் மனங்களில் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.