7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

வியாழன், 12 மார்ச், 2020

உலக அரசியலை நிலைகுலையச் செய்யும் கொரோனா! ஆட்டம் காணும் சர்வதேசம்

சீனாவில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதையும் ஆட்டங் காணச் செய்து கொண்டிருக்கிறது. நிலை தடுமாறிய நிலையில் பல நாடுகள் செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கின்றன.
வல்லரசு நாடுகளே இதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நிலை என்ன? நேற்றைய தினம் பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரையும் கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐரோப்பிய நாட்டுப் பயணிகள் தனது நாட்டுக்குள் 30 நாட்களுக்குள் நுழையக் கூடாது என்று அமெரிக்க அதிபர் நள்ளிரவில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும் பொருளாதாரத்தில் பலத்த அடியினை ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா. இது தொடர்பிலும், மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்