கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் வருகிறது. எனவே ‘சைனீஸ் வைரஸ்’ என மிகவும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை அமெரிக்க அதிபர் ‘சைனீஸ் வைரஸ்’ என்று வர்ணித்திருந்தார். இதனையடுத்து அமெரிக்கா தங்களை அவமானப்படுத்துகிறது என்று சீனா கண்டித்தது.
வுகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் இந்த வைரஸ் ஒரு புரியாத புதிராக மாறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சீனா வெகுவாக முயன்று போர்க்கால கட்டுப்பாடுகளுடன் போராடி வைரஸ் பாதிப்பை குறைத்துள்ள நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கும் வைரஸ் பரவியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வைரஸை ‘சைனீஸ் வைரஸ்’ என்று வர்ணித்தார்.
ட்ரம்பின் இக்கருத்துக்கு சீனா தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தது. எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர், "இது சீனாவிலிருந்து தான் வருகிறது, அதனால் மிகவும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன்.
அமெரிக்க இராணுவம் மூலம்தான் சீனாவில் கோவிட்-19 பரவியது என்று சீனா பொய்யான தகவலை பரப்பி வருவதற்குப் பதிலடியாகத்தான் இப்படி கூற வேண்டியுள்ளது.
சீனா தவறான தகவலைப் பரப்புகிறது, அமெரிக்க ராணுவம்தான் கொரோனா தொற்றை சீனாவுக்கு கொடுத்தது என்ற கருத்தை நான் எப்படி ஏற்க முடியும்? நம் இராணுவம் யாருக்கும் கொரோனாவை கொடுக்கவில்லை என்றார்.