கொரொனா கண்காணிப்பு முகாம்களை அமைத்த களைப்பில் உறங்கும் சிறிலங்கா இராணுவத்தினரை கொண்டாடும் தமிழ் இணையத்தளங்களின் செயலை எண்ணி தமிழ் மக்கள் கவலையடைவதாக தெரிய வந்துள்ளது.
உலக வல்லரசு நாடுகளையே கொரொனா வைரஸ் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும்போதும் கூட சிறிலங்கா அரசு மக்களின் மீது எந்த அக்கறையையும் செலுத்தாது தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
வைரசின் தாக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கவே அவசர அவசரமாக இராணுவத்தினரை களமிறக்கி கண்காணிப்பு முகாமிற்கா கட்டுமானங்களை ஆரம்பத்ததுடன் மட்டுமல்லாது ஒரு பணியுமின்றி இலட்சக்கணக்கில் வைத்திருக்கும் இராணுவத்தினரை வைத்து பணியை செய்யாது குறைந்தளவினரைக் கொண்டு வேலைகளை செய்வித்து அவற்றை ஒளிப்படங்களாக்கி செய்தித் தளங்களிற்கும் கசியவிட்டுள்ளது சிறிலங்கா அரசு.
அது மட்டுமல்லாது விமான நிலையங்களிற்கு அருகில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை கண்காணிப்பதற்கான முகாமை அமைக்காது 500 கிலோமீற்றர்களிற்கு அப்பால் உள்ள தமிழ் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் அவற்றை அமைத்து தமிழ் மக்கள் மீது இன்னொரு இன அழிப்புப் போர் ஏவி விடப்பட்டிருக்கிறது.
இவற்றை கண்டித்து செய்தியாக்காது சிங்கள அரசின் அடி வருடிகளாக இருந்து கொண்டு இராணுவத்தினர் தூக்கிமின்றி தமிழ் மக்கள் மீதான பாசத்தில் வேலை செய்கிறார்கள் போன்றதான தோற்றப்பாடை உருவாக்குவதற்காக தமிழ் இணையத்தளங்கள் துணை போவதை தமிழ் மக்கள்என்றும் மன்னிக்கப் போவதில்லை
தாரகம் இணையத்திலிருந்து.
நன்றி.