7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 23 மார்ச், 2020

யாழ் தாவடி தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம், தாவடிக் கிராமம் வெளியாட்கள் தொடர்பின்றியும் கிராமத்தவர்கள் வெளியேறாதவாறும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும், சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


மதப் போதகருடன் தொடர்பைப் பேணியிருந்த நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்தகாரர் ஒருவர் நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொழும்புக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த கிராமத்தை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் குறித்த கிராமத்திற்கு உள், வெளி தொடர்புகளுக்கு அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்