7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 17 மார்ச், 2020

முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட சுற்றுலா விசாவில் வந்தவர்கள்

முல்லைத்தீவு நகர் பகுதி மற்றும் குமுழமுனை ஆகிய பகுதிகளிலிருந்து இவ்வாறு ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்


சுற்றுலா விசாவில் வருகைதந்து வியாபாரம் மற்றும் சாத்திரம் பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐந்து இந்தியர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
சுற்றுலா விசாவில் வருகைதந்து, தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து இந்தியர்களை முல்லைத்தீவு பொலிசார் நேற்று 16.03.2020 (திங்கள்) இரவு கைதுசெய்திருந்தனர்.
இது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து முல்லைத்தீவு நகர் பகுதி மற்றும் குமுழமுனை ஆகிய பகுதிகளிலிருந்து இவ்வாறு ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிறீ மகா கணபதிபுரம், கூழாமங்கலம், எழும்பூர், தமிழ்நாடு என்ற முகவரியினைச் சேர்ந்தவர்களான, மூக்கையா முனியாண்டி(வயது -37), கறுத்தப்பாண்டி கப்டன் பிரபாகரன்(வயது - 33), பாண்டி குமார்(33), முனியாண்டி ஐயப்பன் (வயது-40), கைலாசு கட்டப்பொம்மன் (வயது-53) ஆகிய ஐவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஐவரையும், பொலிசார் 17.03 இன்றையநாள், முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் சுதர்சன் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இந் நிலையில் பதில நீதவான் குறித்த ஐவரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்