7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 15 மார்ச், 2020

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை இல்லையா?

இலங்கை தமிழரின் பூர்வீகமும் இந்தியா தான். ஆகவே சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வழக்கறிஞர்கள் தான் அலசி ஆராய்ந்து இந்த சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது, இதனால் பாதிப்பு என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஆனால், அவா்கள் மெளனமாக இருப்பது புரியவில்லை. இச்சட்டம் இஸ்லாமியா்களை மட்டும் பாதிக்கவில்லை. ஏழைகள், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் சட்டம் இது.
இலங்கைத் தமிழா்கள் இந்துக்கள், அவா்கள் பூா்வீகம் இந்தியா தானே. சிங்கள இனவெறி காரணமாக சிறுபான்மையராக இலங்கைத் தமிழா்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனா். அவா்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை?.
உலக நாடுகள் பலவற்றிலும் மூன்றாண்டுகள் எந்த வழக்குகளும் இன்றி வாழும் பல லட்சம் பேருக்கு, அந்தந்த நாடுகளில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் குடியுரிமை மறுப்பது எந்த வகையில் நியாயம் ?
இந்த சட்டத்தை எல்லா நாடுகளும் எதிர்க்கின்றன. எனவே மத ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் சட்டம் இது என்பதை நாம் கருத்தில் கொண்டு, மதபாகுபாடின்றி ஒற்றுமையாக இணைந்து, மக்களுக்குத் தேவையில்லாத இச்சட்டங்களை எதிர்த்து வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்