கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன்கட்டு குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீடொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இதையடுத்து குறித்த வீட்டில்
தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒரு தொகை வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இராணுவத்தினர், கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.