7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 31 மார்ச், 2020

இந்த நிலமை தொடர்ந்தால் அரச நிர்வாகம் முழுமையாக இராணுவ மயமாகும்!

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் கால தாமதம் ஏற்படுமானால் ஏற்கனவே இராணுவமயப்படுத்தப்பட்டுவரும் அரச நிர்வாகம் முழுமையாக இராணுவ மயமாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் எச்சரித்துள்ளார்.
இதனால் தேர்தல்களை தாமதப்படுத்தாது நடத்த வேண்டியது அனைவரதும் தேவையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய சிவஞானம், அதற்கான நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பை நடத்திய இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரான சி.வி.கே. சிவஞானம் நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய அவசரகால நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுப்பது தவறல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் அதிலிருந்து மீண்டு தமது நாட்டு ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை கட்டியெழுப்ப சுமார் 06 மாதங்கள் தேவைப்படும் என்றும் சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் இராணுவத்தினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுமாயின் பயிர்ச்செய்கை மேற்கொள்வதன் ஊடாக வறுமையை எதிர்கொள்ள முடியும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்