7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

செவ்வாய், 31 மார்ச், 2020

யாழ். சிறைச்சாலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட 44 கைதிகள்

யாழ். சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடா்புடையவா்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிமன்றங்கள் ஊடாக இவா்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாா்கள்.
இதன்படி இன்றும் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கை ஊடாக 197 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்