7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

ஞாயிறு, 15 மார்ச், 2020

யாழ்ப்பாணத்தில் இன்றிரவு மூவர் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இன்றிரவு மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கோப்பாய் பொலிஸாரால் இன்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கோண்டாவில் உப்புமடம் சந்திப்பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது அவ்வழியே வந்த பொலிசார் அவர்களை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்