7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

திங்கள், 16 மார்ச், 2020

முற்றாக முடங்கியது கொழும்பு நகரம்

ஸ்ரீலங்காவிலும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரம் முற்றாக முடங்கியுள்ளது. பொது மக்களின் நடமாட்டம் இல்லாம் நகரம் வெறிச்சோடிப் போய் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
ஸ்ரீலங்காவில் தற்போது வரை 22 பேர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசாங்கம் முக்கியமான திணைக்களங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என அத்தனையும் மூடப்பட்டிருக்கின்றன.
இதேவேளை, இன்றைய தினம் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகமாக மக்களை வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசாங்கம் இன்று அறிவித்திருந்தது.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்