கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துவிச்சக்கரவண்டியை திருப்ப முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 66 வயதுடைய கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் சென்மாணிக்கம் ஆவார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதி புரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய துளசிநாதன் மனோகரன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.